வாசன் கண் மருத்துவமனை & ASG கண் மருத்துவமனைகள் — ஸ்டார் ஹெல்த்
இன்ஷூரன்ஸுடன் நாடு முழுவதும் ‘கேஷ்லெஸ் ’ கண் சிகிச்சை வழங்கும் சிறப்பு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்டார் ஹெல்த் பாலிசி வைத்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் கேஷ்லெஸ் சிகிச்சை பெற முடியும்.
இந்த முக்கிய அறிவிப்பு நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மூத்த பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
வாஸன் கண் மருத்துவமனை தலைமை இயக்க அதிகாாி Dr.K.கமல்பாபு, கண் நரம்பியல் நிபுணர் Dr.சுரேந்திர பால், மற்றும் Dr.பிரேம்குமார்.,MBBS.,DNB.,FAEH. மற்றும் ஸ்டார் ஹெல்த் நிறுவைத்தின் தமிழ்நாடு சீனியர் பிசினஸ் ஹெட் தபாலாஜிபாபு, மற்றும் ஸ்டார் ஹெல்த் அதிகாாி வினோத் பால், முந்நிலையில் வெளியிடப்பட்டது.
ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்
ஸ்டார் ஹெல்த் பாலிசி னவத்திருப்பவருக்கு இந்த இனைப்பு மூலம் வாஸன் -ASG இணைப்பில் உள்ள 170 கண் மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் சிகிச்சை பெற முடியும்.
மூக்குக் கண்ணாடி மாற்று அறுவை சிகிச்ச்சை,
குளுக்கோமா, ரெடினா , நீாிழிவு கண் பராமாிப்பு, குழந்தைகள் கண்
மருத்துவம், கண் புற்றுநோய் (Ocular Oncology), ஆப்டிக்கல் மற்றும் கன்டாக்ட் லென்ஸ்
ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஒப்பந்தம் ஆந்திரா , தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி ,
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கண் நோயாளிகளுக்கு
எளிமையான , விரைவான , கேஷ்லெஸ் கண் சிகிச்சைகள் வழங்கும்.
இவ்வாறு டாக்டர் கமல் பாபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.




