News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

மறைந்த இயக்குனர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்: வழிநெடுக அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி .

மறைந்த இயக்குனர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்: வழிநெடுக அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி .
0 கருத்துக்கள்

சென்னை : மறைந்த இயக்குனர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்து துவங்கியது. வழிநெடுக அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ்(73), மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. நுங்கம்பாக்க த்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன், சிவகுமார், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ,அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், வினோத மலையாள நடிகர்கள் மம்முட்டி, திலீப் உள்ளிட்ட பல திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

பாக்யராஜ் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கும் என முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து பாக்யராஜ் உடல் வெளியே கொண்டு வரப்பட்ட போது போலீசார் மரியாதை செய்தனர். தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் காலை 9 மணியளவில் துவங்கியது.

வள்ளுவர் கோட்டம் சிக்னல், கோடம்பாக்கம் ஹைவே வழியாக ஆர்கே சாலை, காமராஜர் சாலை வழியாக ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்று இறுதியாக பெசன்ட் நகர் மின்மயானம் வந்து அடைகிறது. அங்கு அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுகிறது. அதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. பாக்யராஜின் உடலை வீட்டில் இருந்து வாகனம் வரை பார்த்திபன், சரத்குமார் ஆகியோர் தோளில் சுமந்து வந்த

னர்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!