News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

போதை கலாச்சாரத்திற்கு எதிராக வைகோ நடைபயணம்

போதை கலாச்சாரத்திற்கு எதிராக வைகோ நடைபயணம்
NEWS TODAY TAMIL
Updated on: 12 Nov 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

போதைப் பொருட்களில் இருந்து மாணவர்களை தடுப்பதற்கான சமத்துவ நடைபயணம் ஜனவரி 2-ம் தேதி திருச்சியில் தொடங்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இதன் பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "பள்ளி, கல்லூரி மாணவர்களைச்   சீர்கெடுக்கும் மது மற்றும் போதை பொருட்களில் இருந்து தடுப்பதற்கான சமத்துவ நடைப்பயணம் ஜனவரி 2-ம் தேதி திருச்சி மாநகரில் தொடங்க உள்ளேன்.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெறும்  சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன். திருச்சியில் ஜனவரி 2-ம் தேதி  தொடங்கும் சமத்துவ நடைபயணம்   ஜனவரி 12-ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது.திமுக ஆட்சி மீண்டும் தொடர மற்றும் பல்வேறு கோரிக்கைகளுடன் 180 கிலோ மீட்டர் சமத்துவ நடைபயணம் தொடங்க உள்ளது.

திருச்சியில் தொடங்கப்படும் இந்த  நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். மதுரையில் முடியும் இந்த நடைப்பயண நிறைவு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவர் செல்வபெருந்தகை, சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த சமத்துவ நடைப்பயணம் என்னுடைய ஒன்பதாவது நடைபயணம்” என்றார். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.