திருப்பரங்குன்றம் மலையில் பன்றி குட்டிகளை நேர்த்திகடன் செலுத்த அனுமதி கூறி வக்கீல் உயர் அதிகாரிகளுக்கு மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார் மனு அளித்துள்ளார்.
அவரது மனுவில், திருவிளையாடல் புராணமான பன்றி குட்டிகளுக்கு சிவபெருமான் பாலூட்டிய லீலை திருப்பரங்குன்றம் கோயிலில்
நடைபெற்றதாகவும், அதனை நம்பி பொதுமக்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் அங்கே வைக்கப்பட்டுள்ள பன்றி குட்டிகளுக்கு பாலூட்டும் சிவபெருமான் சிலையை வழிபட்டு செல்லுமாறும் கோவிலுக்குள்ளே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் படித்து பார்த்து வழிபட்டு செல்கிறார்கள். ஆகவே திருவிளையாடல் புராணத்தை பக்தர்கள் நம்புவதற்காக வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையின் படி கோவில் நிர்வாகமே முன்னின்று சிவபெருமான் பன்றி குட்டிகளுக்கு பால் ஊட்டிய லீலை நடத்த வேண்டும் என ஏற்கனவே கடந்த வருடம் மனு அளித்துள்ளார். மேலும் தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு சாதாகமான உத்தரவு வந்தால் 12 பன்றி குட்டிகளை மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கார்த்திகை தீபத்திருநாள் அன்று தான் காணிக்கை செலுத்த நேர்த்தி கடன் வைத்திருப்பதாகவும் தற்பொழுது கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு வந்துள்ளது. ஆனால் பன்றி குட்டிகளை மட்டும் நேர்த்தி கடன் செலுத்த அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. பன்றி தீண்டத்தகாத விலங்குமல்ல. தடை செய்யப்பட்ட விலங்கும் அல்ல. வனவிலங்கும் அல்ல. ஆடு, மாடு, கோழி சேவல்களைப் போன்று ஒரு புனிதமான தெய்வீகத் தன்மை பொருந்திய சிவபெருமானின் மறு உருவமான பிராணி ஆகும். ஆகவே திருப்பரங்குன்றம் மலை மேல் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் பெருமானுக்கு 12 பன்றி குட்டிகளை நேர்த்தி கடனாக செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும்மனுவில் கூறப்பட்டுள்ளது.