பதட்டத்தில் திருப்பரங்குன்றம்..போலீசார் குவிப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆளும் அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் தீபம் ஏற்றக்கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளது. அதே நேரம் பாஜக, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உட்பட பல அமைப்புகள் தீபம் ஏற்றியே தீர வேண்டும் என போராடி வருகின்றனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்து அமைப்பினர் மற்றும் ஆளும் கூட்டணியினர் நாளை திருப்பரங்குன்றத்தில் கூடுவார்கள்.
இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு அங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். பழனியாண்டவர் கோயில் முன்பு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மலையைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.