தமிழக கழக கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி எஸ் பாபு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார்.
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி எஸ் பாபு மூச்சு திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை அளிக்காமல் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதியே அவர் இறந்து விட்டதாக நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். காரணம் அவர் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்தார். அந்தக் கருவியை அகற்றி விட்டால் அவர் இறந்து விடுவார் என்று குடும்பத்தினரிடம் அன்றே தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உடல்நலம் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் சென்று பார்த்துவிட்டு கூறினார்கள். அதன் பிறகு அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் கொளத்தூர் தொகுதி மக்கள் சார்பில் அவரது உடல்நிலை குறித்து விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை அவருக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.