News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்க கூடாது

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்க கூடாது
0 கருத்துக்கள்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில், தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.


அப்போது, ஆட்சியரிடம் இருந்து நேற்று புகார் பெறப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


ஆட்சியர் ஜூலை 31 அன்றே அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுத்திருந்தால் ஆட்சியர் புகார் அளித்திருக்க மாட்டார்.


ஆட்சியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி


தவெக எம்எல்ஏ வழக்கில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.


மேலும், இந்த வழக்கை எஸ்.பி.க்கு பதில் வேறு உயர் அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும், அந்த விசாரணையை ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ வீட்டிற்கு சென்ற உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு எஸ்.ஐ. யோகேஸ்வரன் தலைமையிலான போலீசார், இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.

 எம் எல் ஏக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோர்ட்டில் போலீசார் தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து அதிமுக எம்பி இன்பதுரை செய்தி குறிப்பில், தவெக எம்எல்ஏ மீது FIR பதிவு செய்யப்பட்டுவிட்டது.. எதுவுமே நடக்கவில்லை என கூறிய அமைச்சர்கள் குற்றவாளிக்கு துணை போனவர்கள் என்று இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!