News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
இந்தியா

திருப்பரங்குன்றம் மலை முழுக்க மத்திய ரிசரவ் போலீஸ் படை

திருப்பரங்குன்றம் மலை முழுக்க  மத்திய ரிசரவ் போலீஸ் படை
0 கருத்துக்கள்

 தீபத்தூனில் தீபம் ஏற்றுவதற்கான பணி தொடங்கியது.

 மலை முழுக்க

மத்திய பாதுகாப்பு படை 


 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகள் நிர்வகிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

 இதை அடுத்து பெங்களூர், கோயம்புத்தூரில் இருந்து 500க்கும் மேற்பட்டமத்திய பாதுகாப்பு படையினர் திருப்பரங்குன்றத்திற்கு வந்தனர். அதிகாலை முதல் மலைக்கு மேல் செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகளை தொடங்கினர். திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்காக வருகை தந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை பொதுமக்கள் மேளதாளம் முழங்கி மலர் தூவி வரவேற்றனர்.

மலைமேல் உள்ள தர்காவை சுற்றிலும் கம்பி வேலி அமைப்பதற்கான தளவாடங்களும் கொண்டு செல்லப்பட்டது. தர்காவை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் மேலே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 

 இந்நிலையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக அந்த இடத்தில் மேடை அமைக்கும் பணியை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

 இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் இன்று காலை மதுரை வந்தனர். அவர்கள் திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானிக பட்டர்களுடன் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றனர். 

 உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாலை 6 மணிக்கு உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபம் எடுக்கப்பட்டு தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது.

 




Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!