News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்
0 கருத்துக்கள்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா இன்று (டிசம்பர் 30) காலமானார். அவருக்கு வயது 80. 

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலீதா ஜியா  இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்னைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளால் கலீதா ஜியா அவதிப்பட்டு வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்து இருந்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியா இன்று காலை 6 மணிக்கு காலமானதாக என்று அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வங்கதேச பிரதமராக முதன்முறையாக 1991 மார்ச் முதல் 1996 மார்ச் வரை பதவி வகித்த கலீதா ஜியா  2001 ஜூன் முதல் 2006 அக்டோபர் வரை 2-வது முறையாகவும் பிரதமராக அவர் பதவி வகித்தார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையாளரான கலீதா ஜியா ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த கலீதா ஜியா, 2024-ம் ஆண்டு தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!