மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த திரு. சசிகுமார் (வயது 45) டெய்லர். இவர் SBI வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்ததுடன், ஆண்டுக்கு ரூ. 1000 செலுத்தி விபத்து காப்பீடும் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், சாலை விபத்தில் திரு. சசிகுமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ. 20 லட்சத்திற்கான காசோலை, சமயநல்லூர் SBI வங்கியில் DSP சேதுமணிமாதவன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. SBI வங்கிக் கிளை மேலாளர் திருமதி R. தீபா மற்றும் வங்கி ஊழியர்களுடன், SBI General Insurance G.M திரு. S. கணேசன், A.M திரு. S. இளையராஜா ஆகியோர் இந்த ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்தவரின் மகன் கௌதம் அவர்களிடம் வழங்கினர்.
இது குறித்து பேசிய வங்கிக் கிளை மேலாளர் திருமதி R. தீபா அவர்கள், SBI வங்கியின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 1000 / ரூ. 2000 / ரூ. 3000 செலுத்தினால், எதிர்பாராமல் நடக்கும் விபத்தில் பயனாளர் உயிரிழந்தால் ரூ. 20 லட்சம் / ரூ. 40 லட்சம் / ரூ. 60 லட்சம் காப்பீட்டுத் தொகை அவர்களது குடும்பத்திற்குக் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இந்தக் காப்பீடானது மிகவும் எளியதாகவும், ஏழை எளிய மக்களுக்குப் பெரும் பலன் தரக்கூடிய வகையிலும் உள்ளதாகவும், சமயநல்லூர் SBI வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இதில் இணைந்து பயன்பெறலாம் என்றார்.