News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு

முதல்வர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு
0 கருத்துக்கள்

முதல்வர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு

ரூ.67,452 கோடி முதலீட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்


'வெற்றி தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது.


சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது .

​மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட 

​முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் விவரங்கள்:

​ஷைலி இன்ஜினியரிங் பிளாஸ்டிக்ஸ் (Shaily Engineering Plastics): நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் இத்திட்டத்தில் ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

​ஆவிட் குழுமம் (Avit Group): நகர்ப்புற உள்கட்டமைப்பு, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் சுரங்க உபகரண உற்பத்தித் துறைகளில் ரூ. 7,000 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

​JK டயர் (JK Tyre): காஞ்சிபுரத்தில் டயர் உற்பத்தித் திட்டத்திற்காக ரூ. 5,143 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் மூலம் 3,510 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

​பிட்சர் (BITZER): காஞ்சிபுரத்தில் HVAC கம்ப்ரஸர்கள் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக ரூ. 300 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

​டைம்லர், ஜெர்மனி (Daimler, Germany): காஞ்சிபுரம் மற்றும் சிப்காட் ஒரகடத்தில் வணிக வாகனங்களுக்கான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ. 4,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!