News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

பொது மக்கள் குறை கேட்க தனி செயலி மதுரை கிழக்கு தொகுதியில்

 பொது மக்கள் குறை கேட்க தனி செயலி மதுரை கிழக்கு தொகுதியில்
0 கருத்துக்கள்

மதுரை கிழக்கு தொகுதி பொது மக்கள் குறை கேட்க தனி செயலி


 சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.


 மதுரை கிழக்கு தொகுதி பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக தமிழக வெற்றி கழக எம்எல்ஏ கார்த்திகேயன் அதற்கு என பிரத்யோக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். 

 தவெக மதுரை கிழக்கு தொகுதி என்ற பெயரில் உருவாக்கி உள்ள செயலியின் செயல்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். விழாவில் கிழக்குத் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், இணைச் செயலாளர் வக்கீல் கார்த்திக், தெற்குத் தொகுதி எம் எல் ஏ கோபிசன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏ கார்த்தி, வில்லாபுரம் ரமேஷ், தான்வி டெக்னாலஜிஸ் முதன்மை செயல் அதிகாரி  ஹரி பிரசாத் மற்றும் கிழக்கு தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களையும், குறைகளையும் தெரிவிக்கலாம். பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது செயலியில் அப்டேட் செய்யப்படும். 

 பொதுமக்களின் புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக பதில் அனுப்பப்படும். 

 பொதுமக்கள் எளிய முறையில் குறைகளுக்கு தீர்வு காண இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கார்த்திகேயன் எம் எல் ஏ தெரிவித்துள்ளார். தொகுதி பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்த TVK MADURAI EAST என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 











Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!