“தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிர நமக்கு வேறு வழி இல்லை”
மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில், இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கூட்டணித் தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
"தொகுதி மறுவரையறை மசோதா தோற்றால், தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை நாம் இழந்துவிடுவோம்."
வரும் ஜனவரிக்குப் பிறகு தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டால், தென் மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்படும் சூழல் உருவாகும்.
1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் மட்டுமே நமது தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்.
எனவே, தற்போதைய சூழலில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை. எங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் நம்பர் ஒன் தான்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.