முன்னாள் துணை மேயர் மன்னன் சொந்த ஜாமீனில் விடுதலை
குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்தில்
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான பிஎம் மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
தவெக ஆட்சியை கவிழ்க்க 30 லட்சம் பேரம் பேசியதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
அவரது உதவியாளர் அணி ராஜா என்பவர் தன்னிடம் செல்போன் ஆதாரம் இருப்பதாக கூறி காவல் துறையில் புகார் செய்தார். அவரின் புகாரின் படி விசாரனைக்கு 7.11.2026 அன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதல் நாளான இன்று காலை அவரை கைது செய்தனர். அவர் சுமார் ஆறு மணி நேர விசாரணை நடத்திய பின்னர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
வழக்கு விசாரித்த நீதிபதி 7ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பிவிட்டு 6ம் தேதி கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அவருக்கு சொந்த ஜாமீனில் விடுதலை செய்து சம்மன் படி 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டார்.