சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
திருச்சி சமயபுரத்தில் 17 வயது சிறுவர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி சிவநேசன் (21) போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்கும் போது போலீசார் சுட்டு பிடித்தனர்.
கரியமாணிக்கம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை எடுக்க சென்றபோது காவலரை தாக்கியதால் சிவநேசனின் காலில் சுட்டுப்பிடித்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.