டாஸ்மாக் மதுபானம்... ஆன்லைனில் முன்பதிவு!
நாளை காலை முதல் ஆரம்பம்
டாஸ்மாக் நிறுவனம் https://tasmace2e.in/ என்ற இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுவகைகள் மற்றும் அவற்றின் துல்லியமான விலையை அறிந்து ஆன்லைன் வழியே முன்பதிவு செய்யலாம்.
QR குறியீடு மற்றும் வழித்தடம்: பணம் செலுத்திய பிறகு, QR குறியீட்டுடன் கூடிய ரசீதும், முன்பதிவு செய்த சம்பந்தப்பட்ட கடைக்குச் செல்வதற்கான வழிகாட்டி வரைபடமும் (Location Map) வழங்கப்படும்.
முன்பதிவு செய்த கடைக்குச் சென்று, அந்த QR குறியீட்டு ரசீதைக் காட்டி மதுபானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடைகளில் வரிசையில் காத்திருப்பதை குறைக்கவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இத்திட்டம் நாளை 6.8.26 தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் மது விற்பனைக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.