News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

கொளத்தூர் தொகுதி தவெக எம் எல் ஏ வி.எஸ். பாபு காலமானார்

கொளத்தூர் தொகுதி தவெக எம் எல் ஏ  வி.எஸ். பாபு காலமானார்
0 கருத்துக்கள்

தமிழக கழக கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி எஸ் பாபு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார்.

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி எஸ் பாபு மூச்சு திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை அளிக்காமல் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதியே அவர் இறந்து விட்டதாக நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். காரணம் அவர் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்தார். அந்தக் கருவியை அகற்றி விட்டால் அவர் இறந்து விடுவார் என்று குடும்பத்தினரிடம் அன்றே தெரிவிக்கப்பட்டது. 

 ஆனால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உடல்நலம் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் சென்று பார்த்துவிட்டு கூறினார்கள். அதன் பிறகு அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதுவும் கொளத்தூர் தொகுதி மக்கள் சார்பில் அவரது உடல்நிலை குறித்து விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுநாள் வரை அவருக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!