சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பாமக தலைவராக மருத்துவர் ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 29) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக டாக்டர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுரவத் தலைவராக ஜி.கே.மணி, பொதுச்செயலாளராக முரளிசங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.