நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழகத்தில் நுழைந்தால் தக்கப்பாடம் புகட்டுவோம்
எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக டெல்லியை போன்று தமிழகத்தில் கலவரம் செய்ய திட்டமிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழகத்தில் நுழைந்தால் தக்கப்பாடம் புகட்டுவோம் என்று இந்துமக்கள்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திரைத்துறையில் வில்லனாக நடிக்கும் கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ்ராஜ் மூன்று மாநிலங்களில் சட்டவிரோதமாக ஓட்டுரிமை பெற்று ஓட்டுத்திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை போன்று ஏராளமானோர் இந்தியா முழுவதும் ஓட்டு திருட்டில் ஈடுபட்டதாகவும், இறந்தவர்களின் ஓட்டு நீக்கப்படாதது போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் SIR அதாவது
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்தியா முழுவதும் கொண்டு வந்தது. இதில் மூன்று மாநிலங்களில் வாக்குதிருட்டில் ஈடுபட்ட பிரகாஷ்ராஜ் போன்றோர்களுக்கு பாதிப்பை உண்டாக்கியது. இறந்தவர்களின் வாக்குரிமை நீக்கப்பட்டது.
இதனால் கொந்தளிப்பான பிரகாஷ்ராஜ் என்பவர் SIR திருத்தத்தால் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்று மக்கள் மத்தியில் ஒரு தவறான குற்றச்சாட்டை கூறி விசமப்பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறும் 13 கோடி பேரில் ஒருவர் கூட இது சம்பந்தமாக புகார் கொடுக்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் வழக்கும் தொடுக்கவில்லை. SIR மூலமாக 13 கோடி பேர் பாதிக்கப்பட்டார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைக்கும் பிரகாஷ்ராஜ் மற்றும் கரப்பான் பூச்சி போன்றோர்கள் கூறுவது முழுவதும் பொய் என்று இந்திய மக்கள் மத்தியில் அம்பலமாகி உள்ளது.
மேலும் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்,ஆம் ஆத்மியின் மறுவடிவமான கரப்பான் பூச்சி என்ற பெயரில் SIR-யை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரியும் டெல்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி மற்றும் காங்கிரஸ் போராட்டத்தில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு இளைஞர்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதால் போராட்ட களம் போர் களமாக மாறியது. கலவரக்காரர்கள் காவல்துறையினரை தாக்கியும்,பொது சொத்துக்களை சேதப்படுத்தியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்க திட்டமிட்டார்கள். உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தவும், மோடியின் நல்லாட்சியை கவிழ்க்க டெல்லியில் நடத்தப்பட்ட கரப்பான் பூச்சி கலவரத்திற்கு பின்னாலும், பிரகாஷ்ராஜிக்கு பின்னாலும் அன்னிய சக்திகள் நிதி உதவி அளித்து இவர்களை இயக்குகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
இந்நிலையில் எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டங்களுக்கு தமிழகத்தில் ஏன் அனுமதிப்பில்லை?என்றும், எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக தமிழ்நாட்டில் தெருவில் இறங்கி போராட உள்ளேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று தமிழகமக்களுக்கு சவால் விட்டுருக்கும் பிரகாஷ்ராஜிக்கு இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடாகவை கண்டித்து போராட்டம் நடத்த துப்பில்லாத பிரகாஷ்ராஜுக்கு தமிழகத்தில் போராட்டம் நடத்த என்ன தகுதி உள்ளது ?
டெல்லியை போன்று தமிழ்நாட்டையும் போராட்ட களமாகவும், கலவர பூமியாகவும் மாற்ற அமைதி பூமியான தமிழகத்தில் பிரகாஷ்ராஜ் வர இருப்பதாக கூறியுள்ளார். அப்படியொரு திட்டத்தோடு தமிழகத்தில் நுழைந்தால் பிரகாஷ்ராஜீக்கு தக்க பாடம் புகட்டுவோம் என இந்துமக்கள்கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.
மேலும் திரைத்துறையில் வில்லனாக நடித்து பணம் சம்பாதித்தது போதாது என்று வெளிநாட்டு அன்னிய சக்திகளிடம் கையூட்டு பெற்று இந்திய அரசாங்கத்திற்கும் , சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கும் (SIR) எதிராக மக்கள் மத்தியில் நல்லவனாக நடிக்கும் அர்பன்நக்சல் அமைப்பை சேர்ந்த தேசத்துரோகி பிரகாஷ்ராஜ் நடித்த திரைப்படங்களை தமிழகத்தில் ஓடவிடமாட்டோம். தமிழர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் தேசவிரோத பிரிவினைவாத தீயசக்தி பிரகாஷ்ராஜ் நடிக்கும் திரைப்படங்களை புறக்கநீக்கவேண்டும் என்று உலக மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.