News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
ஆன்மிகம்

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது  - 1
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது  - 2
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது  - 3
0 கருத்துக்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்றது. 17 ஆண்டுக்கு பிறகு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதற்காக கடந்த 11 ஆம் தேதி முதல் யாக சாலை பூஜை நடைபெற்று வருகிறது. 

16 ம் தேதியான நேற்று பரிவார மூர்த்தி சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

 தொடர்ந்து இன்று காலை 12 வது கால யாகசாலை பூஜைக்கு பின் யாக குண்டங்களில் இருந்து புனிதர் நீர் கலசங்கள் சிவாச்சாரியார்களால் அம்மன் சன்னதி குளம் மற்றும் சாமி சன்னதி கோபுரம், ராஜ கோபுரங்கள் உட்பட அனைத்து ராஜகோபுரங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது.

பின்னர் காலை சரியாக 7.50 மணிக்கு அம்மன் சந்நிதி தங்க விமான கோபுரத்தின் கலசத்திலும், 8.10 மணிக்கு சுவாமி சந்நிதி கோபுர கலசம் அதைத் தொடர்ந்து ராஜ கோபுர தங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 அங்கு கூடியிருந்த பக்தர்கள் விண்ணை பிளக்கும் அளவுக்கு சிவாய நம, சிவாய நம என கோஷம் எழுப்பினர்.

 லட்சக்கணக்கான பக்தர்கள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதிகளில் மற்றும் அருகே உள்ள வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்தும் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். 

 கும்பாபிஷேகத்தை காண கோயில் அருகே போலீசார் அனுமதிக்கவில்லை என்று பக்தர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அப்போது அங்கே வந்த அமைச்சர் நிர்மல் குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

 கும்பசேகத்தின் போது கலசங்களுக்கு ஊற்றிய புனித நீர் கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் தெளிக்கப்படுவது வழக்கம். இதற்காக பிராத்தயோகமாக தெளிப்பான் மூலம் டிரோன் வாயிலாகவும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பது வழக்கம். 

 ஆனால் இந்த டைப் புனித நீ சரியாக தெளிக்கவில்லை என்று பக்தர்கள்  புகார் தெரிவித்தனர்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!