News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

சாலை விபத்தில் இறந்தவருக்கு 20 லட்சம்

சாலை விபத்தில்  இறந்தவருக்கு 20 லட்சம்
0 கருத்துக்கள்


​மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த திரு. சசிகுமார் (வயது 45) டெய்லர். இவர் SBI வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்ததுடன், ஆண்டுக்கு ரூ. 1000 செலுத்தி விபத்து காப்பீடும் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், சாலை விபத்தில் திரு. சசிகுமார் உயிரிழந்தார்.

 ​இதையடுத்து, விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ. 20 லட்சத்திற்கான காசோலை, சமயநல்லூர் SBI வங்கியில் DSP சேதுமணிமாதவன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. SBI வங்கிக் கிளை மேலாளர் திருமதி R. தீபா மற்றும் வங்கி ஊழியர்களுடன், SBI General Insurance G.M திரு. S. கணேசன், A.M திரு. S. இளையராஜா ஆகியோர் இந்த ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்தவரின் மகன் கௌதம் அவர்களிடம் வழங்கினர்.

இது குறித்து பேசிய வங்கிக் கிளை மேலாளர் திருமதி R. தீபா அவர்கள், SBI வங்கியின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 1000 / ரூ. 2000 / ரூ. 3000 செலுத்தினால், எதிர்பாராமல் நடக்கும் விபத்தில் பயனாளர் உயிரிழந்தால் ரூ. 20 லட்சம் / ரூ. 40 லட்சம் / ரூ. 60 லட்சம் காப்பீட்டுத் தொகை அவர்களது குடும்பத்திற்குக் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

 ​இந்தக் காப்பீடானது மிகவும் எளியதாகவும், ஏழை எளிய மக்களுக்குப் பெரும் பலன் தரக்கூடிய வகையிலும் உள்ளதாகவும், சமயநல்லூர் SBI வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இதில் இணைந்து பயன்பெறலாம் என்றார்.

 ​

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!