தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, தவெக சார்பில் இன்று (பிப்ரவரி 6) முதல் விருப்பமனு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை விநியோகித்து நேர்காணல் நடத்தி வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (பிப்ரவரி 6) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது. பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மதியம் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாட்களில் காலை 10 மணி முதல், மாலை6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்படுகின்றன. பிப்ரவரி 14-ம் தேதி வரை இந்த மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என தவெக தலைமை அறிவித்துள்ளது. தவெக மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதால், இன்று அவர்கள் விருப்பமனுக்களை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.