உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு இன்று விசாரிக்க வாய்ப்பில்லை
தீபத்தூரணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவுக்கு இதுவரை வழக்கு எண் வழங்கப்படவில்லை. உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விடுமுறை யில் இருந்ததால், மனு நேற்று விசாரணைக்கு வரவில்லை. சீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு முறையிட்டிருந்தால், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க வாய்ப்பிருந்தது. ஆனால், தமிழக அரசு தரப்பில் அத்தகைய முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை இதனால், சீராய்வுமனு இன்றும் விசாரணைக்கு வரவாய்ப்பில்லை. கார்த்திகை தீபத் திருவிழா முடிந்த பிறகே விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.