மதுரை கிழக்கு தொகுதி பொது மக்கள் குறை கேட்க தனி செயலி
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
மதுரை கிழக்கு தொகுதி பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக தமிழக வெற்றி கழக எம்எல்ஏ கார்த்திகேயன் அதற்கு என பிரத்யோக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தவெக மதுரை கிழக்கு தொகுதி என்ற பெயரில் உருவாக்கி உள்ள செயலியின் செயல்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். விழாவில் கிழக்குத் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், இணைச் செயலாளர் வக்கீல் கார்த்திக், தெற்குத் தொகுதி எம் எல் ஏ கோபிசன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏ கார்த்தி, வில்லாபுரம் ரமேஷ், தான்வி டெக்னாலஜிஸ் முதன்மை செயல் அதிகாரி ஹரி பிரசாத் மற்றும் கிழக்கு தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களையும், குறைகளையும் தெரிவிக்கலாம். பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது செயலியில் அப்டேட் செய்யப்படும்.
பொதுமக்களின் புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக பதில் அனுப்பப்படும்.
பொதுமக்கள் எளிய முறையில் குறைகளுக்கு தீர்வு காண இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கார்த்திகேயன் எம் எல் ஏ தெரிவித்துள்ளார். தொகுதி பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்த TVK MADURAI EAST என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.