காதலி கடனுக்காக கொள்ளையடித்த மதுரை யூடிபர்
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகை கடை திறந்த ஒரே மாதத்தில் அங்குள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. நகை கை கட்டடம் இன்னும் முழுமை பெறாத நிலையில் பின்பக்கம் உள்ள கட்டடத்திற்கான சாரம் வழியாக ஏறி மாடி கதவைத்து உள்ளே சென்று தனி நபர் ஒருவர் கொள்ளையடித்தார்.
குறித்து எஸ் எஸ் காலனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபத்ரா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடையில் இருந்த நகைகளில் 30 சதவீதம் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. முழுமையாக திருடாமல் பகுதியை மட்டும் திருடியது வழக்கமான கொள்ளைக்காரர்கள் இல்லை என போலீசார் கருதினர். இன்று கடையிலிருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கையில் வித்தியாசமான டாட்டூ போட்ட ஒரு நபர் அடிக்கடி கடைக்கு வந்தது தெரிய வந்தது. அவர் முகத்தை வைத்து போலீசார் கண்டிக்கப்பட்ட நாளில் வந்து முகத்தையும் பொருத்திப் பார்த்ததில் ஒரே மாதிரியாக இருந்தது.
அந்த முகம் யூடிபர் நிஷாந்த் என்பது தெரிய வந்தது.
அவரது ரீல்ஸ்கள் பெரும்பாலும் மீனாட்சி என்ற பெண்ணுடன் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் மீனாட்சி மற்றும் நிஷாந்த் தந்தை சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மீனாட்சி கொடுத்த தகவலின் அடிப்படையில் மாடக்குளம் மலை அடிவாரத்தில் உள்ள வயல் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட 5.75 கிலோ நகைகள் மீட்கப்பட்டது.
இந்நிலையில் நிஷாந்தை பிடிக்க மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் 9 தனிப்படைகளை அமைத்தார். இவர் பல்வேறு இடங்களில் பறந்து திரிந்து தேடி வந்த நிலையில் தர்மபுரி அருகே ஆம்னி பஸ்சில் இருந்து தப்பிக்க முயன்ற போது தர்மபுரி போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர் மதுரை எஸ் எஸ் காலனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபத்ராவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் நடத்திய விசாரனையில், விளாச்சேரி மலைப்பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக நிஷாந்த் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுபத்ரா தலைமையிலான போலீசார் அங்கு சென்று நகைகளை மீட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ தங்க நகைகளில் குண்டுமணி தங்கம் கூட விடாமல் அனைத்தையும் போலீசார் மீட்டுள்ளனர்.
இதன் மொத்த மதிப்பு சுமார் 15 கோடி ஆகும். கொள்ளை நடந்த 4 நாட்களில் மொத்த நகைகளையும் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் சுபத்ரா தலைமையிலான போலீசாரை, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்களும் பாராட்டினர்.
கொள்ளையடிக்கப்பட்டது எதற்காக என்று நிஷாந்த் தனது விசாரணையில் கூறுகையில், ' தன் காதலி மீனாட்சி குடும்பத்தினர் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும் அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் கடனாளியாக இருப்பதும் அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக தான் கொள்ளை அடித்ததாக கூறியுள்ளார். அதே நேரத்தில் தனது தநதைக்கும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். காதலிக்காக தாஜ்மஹால் கட்டிய வரலாறு உண்டு. இங்கே காதலியின் கடனை அடைக்க கொள்ளையடித்த புதிய வரலாறு நிசாந்த் படைத்துள்ளார்.