News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

கீழக்கரை அருகே பயங்கர விபத்து- ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

கீழக்கரை அருகே பயங்கர விபத்து- ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி
0 கருத்துக்கள்

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர்கள் கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 5 பக்தர்கள் இருந்து ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்ய காரில் வந்தனர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இன்று (டிசம்பர் 6) அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அருகே காரை நிறுத்தி விட்டு காரில் தூங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திமுக நகர் மன்ற தலைவரின் கார்  ஏர்வாடியில் இருந்து கீழக்கரை நோக்கி 7பேருடன் வந்தது. இந்த கார் நின்று கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த காரின் பின்புறம் வேகமாக மோதியது.  இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மோதிய காரில் இருந்த ஓட்டுநர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும் கீழக்கரையைச் சேர்ந்த 6 பேரும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை செய்தனர்.

அதில்  உயிரிழந்தவர்கள் திமுக நகர்மன்ற தலைவரின் கார் ஓடடுநர்  கீழக்கரையைச் சேர்ந்த  முஷ்தாக் அகமது (30), ஆந்திராவை சேர்ந்த ராமச்சந்திரராவ் (55), அப்பாரோ நாயுடு(40), பண்டார சந்திரராவ் (42), ராமர் (45) ஆகிய என்பது தெரிய வந்தது. அவர்கள் ஐந்து பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கா ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!