News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

லஞ்சத்தை தடுக்க சென்னை பெருநகர காவலில் தனிப்பிரிவு தொடக்கம்

லஞ்சத்தை தடுக்க சென்னை பெருநகர காவலில் தனிப்பிரிவு தொடக்கம்
0 கருத்துக்கள்



சென்னை மாநகரில் காவல்துறையினர் பொதுமக்களை மிரட்டி பணம் கேட்டாலோ, வாங்கினாலோ செல்போன் எண்ணிலோ அல்லது வாட்ஸ் அப் எண்ணிலோ புகார் கொடுக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் அமலராஜ் உத்தரவிட்டுள்ளார். 

இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் புகார்களை கொடுத்து வருகின்றனர். இந்த புகார்களை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக உதவி ஆணையர் தலைமையில் 14 பேர் கொண்ட ஊழல் தடுப்பு பிரிவையும் கமிஷனர் அமலராஜ் உருவாக்கி உள்ளார். அதே நேரம் சென்னை மாநகரில் பணியாற்ற வருவதே லஞ்சம் வாங்கவே என்பதால் ஆளும்கட்சி பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் துணையோடு சென்னையில் முக்கிய இடங்களை பெற்ற ஆய்வாளர்கள் முதல் கூடுதல் துணை ஆணையர்கள் வரை வருத்தத்தில் உள்ளனர்.

 மாதாந்திர மாமூல் பறிபோனதால் கடுப்பான போலீஸ் அதிகாரிகள் கமிஷனர் அமல்ராஜை இடமாற்றம் செய்ய தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 கடந்த திமுக ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் தான் பணியாற்றிய சில ஆண்டுகளிலேயே பல நூறு கோடிகளை வாரி குவித்துவிட்டதாக புகார்கள் எழுந்ததுண்டு. குறிப்பாக சென்னை மாநகரில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி மாமூல் கொடுக்காமல் தப்பிய பொதுமக்கள் யாருமே இல்லை என கூறும் அளவிற்கு போக்குவரத்து போலீசார் மாமூல் மழையில் நனைந்து வந்தனர். 

இந்நிலையில்தான் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட பிறகு சென்னையில் பல ஆண்டுகளாக வெவ்வேறு சரகங்களில் பணியாற்றியும், திமுக ஆட்சியாளர்கள் உதவியோடு முக்கிய இடங்களில் பணியாற்றி வந்த கூடுதல் ஆணையர்கள் முதல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்தார். இதன்பிறகும் கூட சென்னையில் ஊழலை தடுக்க முடியவில்லை. இந்நிலையில்தான் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான கொலையாளியோடு தொடர்பு வைத்திருந்ததாக சிக்கிய தொழில் அதிபர் அனில்குமாரை மிரட்டி 5 லட்சம் ரூபாய் வாங்கியதாக இன்ஸ்பெக்டர் புகாரி கைது செய்யப்பட்டார்.


இதன் பிறகு சென்னையில் ஊழல் புகார்கள் எழக்கூடாது என்பதற்காக கடந்த வாரம் சென்னை மாநகரில் பணியாற்றும் போலீசார் பணம் கேட்டு மிரட்டினானாலோ, பணம் வாங்கினாலோ 78717 23000 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது வாட்ஸ் அப் மூலமோ புகார் கொடுக்கலாம். இந்த புகாரில் உண்மை உள்ளதா என்பதை கண்டறிய கூடுதல் துணை ஆணையர் குமரகுருபரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வு செய்து கமிஷனருக்கு அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கை அடிப்படையில் உடனடியாக இடமாறுதல் முதல் கைது நடவடிக்கைகள் வரை எடுக்கப்படும் என கமிஷனர் அமல்ராஜ் அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் மாமூல் கேட்ட போலீசார் குறித்து செல்போன் எண்ணில் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் 2 ஆயுதப்படை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் மற்றும் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சு பணியாளர் வரை பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிலர் ஆயுதப்படைக்கு உடனே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழல் தடுப்பு பிரிவிற்கு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராமச்சந்திர மூர்த்தி, ஆய்வாளர்கள் சூர்யலிங்கம், ஆதவன் பாலாஜி ஆகிய ஆய்வாளர்கள், சக்தி என்ற பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 14 பேரை கமிஷனர் அமல்ராஜ் நியமித்துள்ளார். இவர்களுடன் பணியாற்ற 2 அலுவலக பணியாளர்களும் நியமிக்கப்பட்டு தனி பிரிவாக செயல்பட உத்தரவிட்டுள்ளார்.


இந்த ஊழல் தடுப்பு பிரிவினர் புகார் எண்ணில் வரும் பொதுமக்களின் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி உடனே கமிஷனருக்கு அறிக்கை அளிப்பார்கள். இந்த புகாரில் உண்மை இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவிற்கு பொதுமக்களும், சென்னை மாநகரில் பணியாற்றும் ஒருசில நேர்மையான காவல்துறையினரும் வரவேற்பு அளித்தாலும், பல ஆண்டுகளாக லஞ்ச லாவண்யத்தில் ஊறிப்போன போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கமிஷனருக்கு பணி ரீதியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கமிஷனரை இடமாற்றம் செய்ய உயர் அதிகாரிகளே திட்டம் வகுத்து கொடுத்து வருகின்றனராம். குறிப்பாக போக்குவரத்து துறையில் கமிஷனர் அமராஜிடம் லஞ்சம் வாங்கி சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் புதிதாக சேர்ந்த பெண் உயர் அதிகாரி என பலருக்கும் இவரது உத்தரவு கடும் இடையூறாக இருப்பதால் மேலிடத்தின் மூலம் உடனே இடமாற்றம் செய்யவேண்டும் என காய் நகர்த்தி வருகின்றனர். இவர்களோடு சென்னை மாநகர ஆணையர் பதவியை பிடிக்க திட்டமிடும் சில கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளும் இதற்கு தூபம் போடும் முயற்சியில் இறங்கி உள்ளனராம். இருப்பினும் தான் கமிஷனராக இருக்கும் வரை சென்னை மாநகர காவல் துறையில் லஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொள்வேன் என கமிஷனர் அமல்ராஜ் கொண்ட கொள்கையில் தீவிரம் காட்டி வருகிறார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!