தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவில் திமுக., அதிமுக., த.வெ.க உள்ளிட்ட எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது. இதையடுத்து 108 இடங்களைப் பிடித்த விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்த கட்சிக்கு காங்கிரஸ், விசிக., கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து விஜய் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார். தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி,-முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர்கள் தலைமையில் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டது. சி.வி.சண்முகம், எஸ். பி. வேலுமணி தரப்பிலான 30 எம்எல்ஏ.க்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நேற்று த.வெ .க. கொண்டு வந்தது. இது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் ஓட்டெடுப்புக்கு விட்டார்.
இதில் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 ஓட்டுகளும் எதிர்ப்பாக 22 ஓட்டுகளும் விழுந்தன. திமுக வெளிநடப்பு செய்த நிலையில் 5 பேர் நடுநிலை வகித்தனர். இதன் மூலம் விஜய் தலைமையிலான அரசு அபார வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குழுவினர் 22 பேர் கட்சி மாறி ஓட்டு போட்டார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு 25 பேர் ஆதரவு உள்ளது.
நேற்று 30 ஆக இருந்த வேலுமணி ஆதரவு இன்று 22ஆக சுருங்கி விட்டது.
சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
மொத்தம் - 234
1- ராஜினாமா
1- திருப்பத்தூர் எம்.எல்.ஏ வாக்களிக்கவில்லை
1- சபாநாயகர்
மீதம் - 231
வெளிநடப்பு - 58
மதிமுகவின் 2 எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வரவே இல்லை
வாக்கெடுப்பின் போது அவையில் இருந்தவர்கள் - 171
தமிழ்நாடு
நம்பிக்கை ஓட்டெடுப்பில் விஜய் அரசு அபார வெற்றி
NEWS TODAY TAMIL
Updated on: 13 May 2026, 12:00 am
•
2 min read
0 கருத்துக்கள்
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!
முந்தைய செய்தி
ஜோதிடரின் அரசு பணி வாபஸ் பெற்றது தமிழக அரசு.
அடுத்த செய்தி
21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் விற்க தடை
உங்களுக்குப் பிடிக்கலாம் (Recommended News)
வழக்கறிஞர்களும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்
29-07-2026
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.. தவெக எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் உதயகுமார் கோரிக்கை
29-07-2026
உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்த தமிழக அரசு திட்டம்: ஆலோசனைக்காக அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம்:
06-07-2026
சென்னையில் ரூ.53 லட்சம் நகை திருட்டு: கடையில் கைவரிசை காட்டிய பெண் சிக்கினார்:
06-07-2026கருத்துப்பெட்டி (Comments)
இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!