மாஸ்கோவில் கார் குண்டுவெடித்ததில் ரஷ்யாவின் லெப்டினன்ட் ஜெனரல் உயிரிழந்தார். இதற்கு பின்னால் உக்ரைன் சதி உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.
நேட்டோ நாடுகளை உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் அந்நாட்டு ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உக்ரைனின் சதி உள்ளதாக என்று ரஷ்யா விசாரணை நடத்தி வருகிறது. இதே போல
கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார்.