தமிழ்நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் புதிய ரயில்வே திட்டங்கள் குறித்து ராஜ்யசபாவில் அதிமுக எம்பி இன்பதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அளித்த பதிலில்,
"தமிழ்நாட்டில் 1,874 கி.மீ. நீளத்தில் 19 ரயில்வே திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
திண்டிவனம்–நகரி, மொரப்பூர்–தர்மபுரி, திண்டிவனம்–திருவண்ணாமலை, அட்டிப்பட்டு–புத்தூர், சென்னை–கடலூர் உள்ளிட்ட புதிய ரயில் பாதைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் 3,517 கி.மீ. நீளத்தில் 29 புதிய ரயில்வே ஆய்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் அரியலூர்–நாமக்கல் (பெரம்பலூர் வழியாக) புதிய ரயில் பாதை உள்ளிட்ட முக்கிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
தென் தமிழ்நாட்டிற்கு பயனளிக்கும் மணியாச்சி–நாகர்கோவில் இரட்டைப் பாதை திட்டம் நிறைவடைந்துள்ளது. திருவனந்தபுரம்–கன்னியாகுமரி இரட்டைப் பாதை பணி நடைபெற்று வருகிறது. மேலும் விழுப்புரம்–திருச்சி–நாகர்கோவில் 3 & 4-வது ரயில் பாதை திட்டத்திற்கான ஆய்வும் அனுமதிக்கப்பட்டுள்ளது" என்று ரயில்வே அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மேம்பட்ட ரயில்வே இணைப்பு கிடைக்க நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் அதிமுக ராஜ்யசபா எம்பி இன்பதுரை தெரிவித்தார்.