மதுரை நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளை.
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதியில் டாடாவின் தனிஷ்க் நகைக் கடை சமீபத்தில் தனது புதிய கிளையை திறந்தது. இந்த நகை கடையில் அதிகாலை 3 மணியளவில், ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
அண்மையில் திறக்கப்பட்ட கடையின் பின்புறம் வழியாக நுழைந்த முகமூடி அணிந்த மர்மநபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக அதன் மேலாளர் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் மதுரை காலனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபத்ரா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கிருந்து சிசிடிவி காட்களை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளை நடந்த நகைக்கடையில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ள நிலையில் போலீஸ் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.