News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

மதுரையில் லாக்கப் டெத்.. இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை

மதுரையில் லாக்கப் டெத்.. இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை
0 கருத்துக்கள்

மதுரையில் லாக்கப் டெத்.. இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை

2 கோடி ரூபாய் ஏலக்காய் ஆட்டைய போட்ட வழக்கில்



மதுரை மாவட்டம் வாலாந்தூரில் ஏலக்காய் ஏற்றி வந்த லாரி தீ பிடித்த வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட டிரைவர் காவல் நிலையத்திலேயே தூக்கு மாட்டி இறந்துள்ளார்.


[தேனி மாவட்டம் போடியில் இருந்து ஒரு லாரியில் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்தது. உத்தம பாளையத்தைச் சேர்ந்த ரங்கப்ப நாயக்கர் மகன் பாலகிருஷ்ணன்(42) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். வரும் வழியில் வாலாந்தூர் அருகே லாரியை நிறுத்தி அதில் இருந்த பாதி ஏலக்காய் மூடைகளை ஆட்டையை போட்டு விற்பனை செய்துள்ளனர். பின்னர் லாரியை தீவைத்து எரித்துள்ளனர். அடுத்த ஐந்து நிமிடத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு டிரைவர் தகவல் கொடுத்துள்ளார். 

 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீதமுள்ள ஏலக்காய் மூடைகளை மிச்சப்படுத்தினர். 

 தகவல் அறிந்து ஏலக்காய் வியாபாரி வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

நான் அனுப்பிய மூடைகளை விட குறைவாக இருப்பதாக வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்..

புகாரைப் பெற்ற இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்யாமல் இழுத்து அடித்துள்ளார். சி எஸ் ஆர் காப்பி கொடுத்தால் இன்ஷூரன்ஸ் கிளைம் செய்து விடுவதாக ஏலக்காய் வியாபாரி கூறியுள்ளார். சில நாட்களளுக்கு பிறகு அங்குள்ள எஸ்பி ஏட்டு ஆனந்த் என்பவர் மூலம் பேரம் பேசப்பட்டு வழக்கு பதிவு செய்து சி எஸ் ஆர் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லாரியில் இருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகள் லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் திருடியது தெரிய வந்தது. 

 2 கோடிக்கு ஆசைப்பட்ட இன்ஸ்பெக்டர் எஸ்பி ஏட்டு ஆனந்த் மூலம் டிரைவரை நேற்று மாலை அழைத்து வரச் செய்துள்ளார். டிரைவரிடம் இருந்து தகவல்களை வரவழைக்க இன்ஸ்பெக்டர் முத்து கடுப்பு காட்டி உள்ளார். இந்நிலையில் அதிகாலை 6.30 மணிக்கு காவல் நிலையத்தில் உள்ள பாத்ரூமில் அவர் தூக்கு மாட்டி இறந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

டிரைவர்  தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அடித்ததில் இறந்த பிறகு அவரை தூக்கு மாட்டி நாடகம் ஆடினார்களா என்ற கோணத்தில் மதுரை சரக டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கற்பழிப்பு, சிறுமி கடத்தல், கொலை, கொள்ளை, அதிகாரிகள் மிரட்டல், கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்புதல் என்ற வரிசையில் தற்போது லாக்கப் டெத்தும் இடம்பெற்று விட்டது.

 இந்நிலையில் காவல் நிலையத்தில் இறந்த டிரைவர் பாலகிருஷ்ணனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தங்கள் மகன் இறப்புக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மட்டும் போலீசார் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 





Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!