News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

டெல்லியில் தீபாவளியை குறிவைத்த தீவிரவாதிகள்... அதிர்ச்சி தகவல்

டெல்லியில் தீபாவளியை குறிவைத்த தீவிரவாதிகள்... அதிர்ச்சி தகவல்
0 கருத்துக்கள்

டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 டாக்டர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உத்தரப் பிரதேச மாநிலம்,  லக்னோவைச் சேர்ந்த ஷஹீன் சயீத், ஜம்மு - காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அதீல், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, தெலங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகரை சேர்ந்த  தஜமுல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் இடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அத்துடன் அவரது தொலைபேசியையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.அவரிடம் நடந்த விசாரணையின் போது, ​​அடுத்த ஆண்டு ஜனவரி 26- ம் தேதி தாக்குதல் திட்டம் இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியை நோட்டமிட்டு வந்ததாகவும் கூறினார்.

தீபாவளிக்கு மக்கள் நெரிசலான இடத்தில் தாக்குதல் நடத்த  அவர்கள்  திட்டமிட்டதாகவும், ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என்றும் முஸம்மில் கனி போலீஸாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!