News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

டெல்லி கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லி கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
0 கருத்துக்கள்

டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற திருப்பலியில் கலந்து கொண்டார். அத்துடன் அங்கிருந்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், " அனைவருக்கும் அமைதி, இரக்கம் மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்" என்று  தெரிவித்துள்ளார். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!