மூத்த பத்திரிகையாளர் சா. தன்ராஜ் எழுதிய ‘காலம் கடந்து நிற்கும் கவிஞர்கள்’ நூல் வெளியீட்டு விழா மதுரை செய்தியாளர் அரங்கில் இன்று நடைபெற்றது.
மூத்த பத்திரிகையாளராகப் பல ஆண்டுகள் ஊடகத் துறையில் பணியாற்றி வரும் சா. தன்ராஜ், இலக்கியத்தின் மீதும் கவிதைகளின் மீதும் கொண்டுள்ள ஆர்வத்தின் வெளிப்பாடாக 'காலம் கடந்து நிற்கும் கவிஞர்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
நூல் வெளியீட்டு விழா மதுரை செய்தியாளர் அரங்கில் இன்று நடைபெற்றது.
விழாவுக்கு செய்தியாளர் சங்கத் தலைவர் எஸ். கதிரவன் தலைமை தாங்கினார். செய்தியாளர் செயலாளர் ரமேஷ் பாண்டியன், பொருளாளர் சுப்பிரமணியன், தொழிலதிபர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூல் ஆசிரியர் தனராஜ் வரவேற்றார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை, மூத்த செய்தியாளரும் எழுத்தாளருமான ப. திருமலை, தி ஹிந்து ஆங்கில நாளிதழின் தலைமை செய்தியாளர் எல். கிருஷ்ணா, தினமலர் செய்தி ஆசிரியர் ஜி. வி. ரமேஷ் குமார், நல்லாசிரியர் விருது பெற்ற மகேந்திர பாபு, ராஜம் பள்ளி ஆசிரியை சுலைகா பானு, கவிஞர் மாயவனாதன் மகன் செல்ல வேல், மூமுக மாவட்ட தலைவர் வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக அனைவர் முன்னிலையிலும் நூல் வெளியிடப்பட்டது.
காலத்தால் அழியாத கவிஞர்களின் படைப்புகளையும், அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
செய்திப் பணியில் சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளையும் மக்களின் உணர்வுகளையும் பதிவு செய்து வரும் தன்ராஜ், இலக்கியப் படைப்பின் மூலமாகவும் தனது சிந்தனைகளைப் பகிர்ந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். பத்திரிகைத் துறையில் பெற்ற அனுபவத்தையும், இலக்கியத்தின் மீதான ஈடுபாட்டையும் ஒருங்கிணைத்து அவர் உருவாக்கியுள்ள இந்நூல், வாசகர்களிடையே கவிதை இலக்கியம் குறித்த ஆர்வத்தை வளர்க்கும் என அனைவரும் பாராட்டி பேசினர்.
மூத்த பத்திரிகையாளராகப் பணியாற்றுவதுடன், நூலாசிரியராகவும் புதிய பரிமாணத்தில் தடம் பதித்துள்ள சா. தன்ராஜின் இந்த முயற்சி, பத்திரிகைத் துறையினருக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.