தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வரவேற்பும் எதிர்ப்பும்!
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில கௌரவ தலைவர் MP. இராமன் தங்களது வரவேற்பையும் வருத்தத்தையும் செய்தியாக தெரிவித்துள்ளார்.
வரவேற்கத்தக்க அம்சங்கள்:
நீர்ப்பாசனத் திட்டங்கள்: நீர்ப்பாசன திட்டத்தை மேம்படுத்த ₹9,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. (கடந்த காலத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை).
நதிகள் இணைப்பு: காவேரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ₹150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு: வைகை, காவேரி மற்றும் தாமிரபரணி அணைக்கட்டு பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாதுகாப்பு: விவசாயிகள் வேளாண் பணியின் போது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ₹20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எல் நீனோ பாதிப்பு நிவாரணம்: எல் நீனோ தாக்குதலால் இந்த ஆண்டு குருவை சாகுபடி செய்ய முடியாத நிலையைச் சமாளிக்க, கடனை எதிர்கொள்ள ₹640 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
துரித நிவாரண நிதி: பேரிடர் காலத்தின் ஆபத்தை மேம்படுத்துவதற்கு / எதிர்கொள்வதற்கு ₹11,562 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒப்பற்ற திட்டங்கள்: வேளாண் வளர்ச்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள இந்த அரசைப் பாராட்டுகிறோம் மற்றும் வரவேற்கிறோம்.
எதிர்ப்பும் வருத்தமும் (வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி):
விவசாயிகள் கடன் சுமையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், பயிர்க் கடன் முழுமையையும் தள்ளுபடி செய்யாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.