News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

இந்து மக்கள் கட்சி தலைவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை

இந்து மக்கள் கட்சி தலைவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை
NEWS TODAY TAMIL
Updated on: 20 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத்தலைவர் சோலைகண்ணனுக்கு காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென் இந்திய ஃபார்வர்ட்பிளாக் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், " தேசவிரோத மற்றும் மதவெறி பிடித்த  அடிப்படைவாத பயங்கரவாதிகளால் சோலைகண்ணன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இன்றைய வரைக்கும் 24 நேரமும்  துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு இருந்தது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு சட்டமன்ற தேர்தல்,ஒரு உள்ளாட்சி தேர்தல் போன்ற தேர்தல் காலத்தில் மட்டுமல்லாதது ஒரு நிமிடம் கூட இதுவரைக்கும்  சோலைகண்ணனுக்கு காவல்துறை பாதுகாப்பை எடுத்ததில்லை.

ஆனால்,  இன்று ( டிசம்பர் 20) காலை காவல்துறை பாதுகாப்பு திடீரென எடுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. தேசவிரோத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், இந்துவிரோத சக்திகளுக்கு எதிராகவும் தேசியத்தையும் தெய்வீகத்தையும் காக்க முழுநேரமாக ஜனநாயக ரீதியாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன்   போராடி வருகிறார்

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு கோழி பலியிடுவதற்கும்,கந்தர் மலையை  சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கும்  அடிப்படைவாதிகள் செயல்பட்ட போது அதனை எதிர்த்து சட்ட போராட்டத்தின் மூலமாக  நீதிமன்றத்தில் தடை ஆணையை வாங்கி சோலைகண்ணன்  வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது தீபத்தூண் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில் சோலைகண்ணனும் ஒருவர். அடிப்படை பயங்கரவாதிகளுக்கும், இந்துவிரோத சக்திகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்க கூடிய சோலைகண்ணனுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென தவிர இந்நேரத்தில் காவல்துறை பாதுகாப்பை எடுத்துள்ளதற்கு  தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது.

பயங்கரவாதிகளால் சோலைகண்ணன் உயிருக்கு எந்நேரத்திலும் அச்சுறுத்தல் இருக்கும் போது யாருடைய அழுத்ததின் காரணமாக சோலைகண்ணனுக்கு பாதுகாப்பு எடுக்கப்பட்டது?  சோலைகண்ணனை கொல்ல   தமிழக காவல்துறையும் இந்த தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சோலைகண்ணன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் இந்த தமிழக அரசாங்கமும், காவல்துறையும் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

சோலைகண்ணன் பின்னால் லட்சக்கணக்கான இந்து இயக்க போராளிகள் இருக்கிறார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலையைப் பாதுகாக்க உரிமைக்காகவும், தேசநலனுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் சோலைகண்ணனுக்கு  காவல்துறை  பாதுகாப்பு மீண்டும் வழங்கவேண்டுமென தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் சார்பாக  தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் கோரிக்கை விடுக்கிறோம்" என்று கூறியுள்ளார். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.