டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம்
தமிழக அரசு உத்தரவு
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்திப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். அவரே நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலிருந்து சந்திப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் உட்பட 3 பேர் பெயர் நிரந்தர டிஜிபியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் மகேஷ் குமார் அகர்வால் தமிழகத்தின் நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இதை எடுத்து டிஜிபியாக இருந்த சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திரைத்துறை டிஜிபியாக இருந்த சங்கர் தமிழக அமலாக்க பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.