News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

மாநகராட்சி தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை:

மாநகராட்சி தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை:
0 கருத்துக்கள்

சென்னை: மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என தமிழக அரசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி களிலும் தூய்மைப் பணியை தனியாருக்கு விடுவதற்கான முயற்சி யை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மிகவும் இன்றியமையாதது. இந்த பணிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவை சேர்ந்த மக்களே.

அவர்களை பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் பணி அமர்த்துவது சமூகநீதிக் கொள்கைக்கு முரணானதாகும். முந்தைய காலத்தில் தனியார் நிறுவ

னங்கள் தூய்மைப் பணியாளர் களை சட்டப்பூர்வமாக ஒப்பந்த முறையில் சுரண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் தனியார்மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கையை புறக்கணித்தனர்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களைப் படிப்படியாக அந்தப் பணியிலிருந்து விடுவித்து, மாற்றுப் பணிகளை வழங்குவதும், தூய்மைப் பணியில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதும், இயந்திரமயமாக்குவதும், அவசியம்.

எனவே தற்போதைய புதிய அரசு தனியார்மயமாக்கலுக்கு முடிவு கட்ட வேண்டும். மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு களில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி யுள்ளா

ர்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!