News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

மதுரையில் Royal Enfield-ன் “புல்லட் திருவிழா”

மதுரையில் Royal Enfield-ன் “புல்லட் திருவிழா”
0 கருத்துக்கள்

மதுரையில் Royal Enfield-ன் “புல்லட் திருவிழா”


ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரைடர்கள் பங்கேற்பு


மதுரை: உலகளவில் நடைபெற்ற Royal Enfield-ன் 125-வது ஆண்டு One Ride 2026 என்ற “புல்லட் திருவிழா” நிகழ்வு மதுரை அரசரடி U.C.school மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட Royal Enfield ரைடர்கள் கலந்து கொண்டனர்.


உலகம் முழுவதும் 63 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Royal Enfield ரைடர்கள் ஒரே நாளில் பங்கேற்ற One Ride 2026-ன் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக மதுரையிலும் இந்த சிறப்பு திருவிழா நடைபெற்றது.


Royal Enfield-ன் பாரம்பரியம், மோட்டார் சைக்கிளிங், கலாச்சாரம் மற்றும் ரைடர்களின் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், Royal Enfield ரைடர்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


விழாவில் மோட்டார்சைக்கிள் சார்ந்த விளையாட்டுகள், குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டுகள், கலாச்சார நடன நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, இசை நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


மேலும், Royal Enfield-ன் அனைத்து மாடல்கள்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாடலையும் நேரடியாக அனுபவிக்கும் வகையில் Test Ride-க்காக பிரத்யேக Track அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரைடர்கள்ள் Royal Enfield மோட்டார்சைக்கிள்களின் செயல்திறன் மற்றும் Riding Experience-ஐ நேரடியாக அனுபவித்தனர்.


மேலும், Royal Enfield Helmets, Riding Gears, Apparels, Exchange Mela மற்றும் உணவு ஸ்டால்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.


விழாவின் முக்கிய நிகழ்வாக, Royal Enfield-ன் புதிய Himalayan 440 மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்த One Ride 2026 நிகழ்வில் Royal Enfield டீலர்களான கே.ஜி. ஆதிலிங்கம், கே.ஜி. வெங்கடேசன், ஜி.ஏ. ராஜ்குமார் மற்றும் பி. ஈஷ்வர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Royal Enfieldன் மண்டல மேலாளர் G.V. பிரவீன் குமார், மண்டல சர்வீஸ் மேனேஜர் R.தமிழ் அழகன், ஏரியா சேல்ஸ் மேலாளர்கள் பிரபாகரன், முரளி, ஏரியா சர்வீஸ் மேனேஜர் பழனிவேல், டீலர் டெவலப்மெண்ட் மேனஜர் பிரபு, சாய் பிரதீப் உள்ளிட்ட Royal Enfield நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


விழாவில் மதுரையைச் சேர்ந்த Royal Enfield உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து, தங்களது மோட்டார்சைக்கிளிங் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

 மதுரையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் Royal pandiyas madurai Enfielder's club-ன் 16 ஆம் ஆண்டு விழா royal pandiyas Riders மற்றும் அனைவர் முன்னிலையிலும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!