News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு: 9 பேர் கைது

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு: 9 பேர் கைது
NEWS TODAY TAMIL
Updated on: 16 Jan 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த 9 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்..

இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான கப்பல்,  அரேபிய கடலில் ரோந்து பணியில் நேற்று  நள்ளிரவு ஈடுபட்டிருந்தது. அப்போது பாகிஸ்தானின் மீன்பிடி படகு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததைக்  கண்டனர்.  அதில் இருந்தவர்கள் கப்பலைக் கண்டதும், பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல முயன்றனர். ஆனால், இந்திய கடலோர காவல்படையினர் போர்ப்பந்தர் அருகே அந்த படகை சுற்றி வளைத்து பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக, குஜராத் பாதுகாப்புத் துறையின் பிஆர்ஓ விங்க் கமாண்டர் அபிஷேக் குமார் திவாரி கூறுகையில்,, " அரபிக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய கடலோர காவல்படை கப்பல்,  சர்வதேச கடல் எல்லைக் கோட்டுக்கு அருகில் இந்திய கடல் எல்லைக்குள் ஒரு பாகிஸ்தான் மீன்பிடிப் படகைக் கண்டது. இந்திய கப்பலைக் கண்ட அந்த படகு  பாகிஸ்தான் பக்கம் தப்பிச் செல்ல முயன்றது. ஆனால்,, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி)  பாகிஸ்தான் படகை பறிமுதல் செய்தது. அதில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

இதற்கு முன்பாக கடந்த 2025 டிசம்பரில் இந்திய கடல் எல்லைக்குள் பாகிஸ்தான் படகு அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 11 பாகிஸ்தானியர்களை கைது செய்து உள்ளூர் கடல்சார் போலீஸாரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.