கலைஞர் கருணாநிதி 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி.
முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் -மாநகர செயலாளர் கோ. தளபதி
தலைமையில்
தமிழ் இனம், மொழிக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆக.7) அனுசரிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் திமுகவினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்துகின்றனர்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏ, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி ஆகியோர் தலைமையில் தமிழ்ச்சங்கம் செந்தமிழ் கல்லூரியில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு சிம்மக்கல் கலைஞர் சிலையை வந்தடைந்தது. தொடர்ந்து கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில், திமுகவின் அனைத்துஅணியினரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.