News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பழனி நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு

பழனி நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு
0 கருத்துக்கள்


பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் என்பவர் சிறையில் உயிரிழந்தார்.


பழனி தண்டாயுதபாணிள கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ருபாய் மதிப்பிலான நிலத்தை குறைந்த விலைக்கு போலி பத்திரம் மூலம் மோசடி செய்து ஒரு குரல் பத்திரப்பதிவு செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இந்த வழக்கில் வழக்கறிஞர் அன்வர் தீன் என்பவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த அன்வர்தீன், உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனை மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சி பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

 இது ஒரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இறந்த வழக்கறிஞர் அன்வருக்கு 66 வயது ஆகிறது. இவர் சில ஆண்டுகள் முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நடப்பதற்கே சிரமம் கொண்டுள்ளார். மிகவும் வறுமையில் உள்ள இவர் அவ்வப்போது பிற வக்கீல்களுக்கு சட்டரீதியாக ஆலோசனை கூறுவது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார். தன் பேரில் இந்த பத்திரப்பதிவு பதிவு செய்தவர்கள் வழக்கறிஞர் அன்வர் தீனிடம் சட்ட ரீதியான ஆலோசனை பெற்றுள்ளனர்.

 இந்நிலையில் பழனி கோயில் மோசடி வழக்கில் சதித்திட்டங்களுக்கு உடந்தையாக இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் உடல்நல குறைவு காரணமாகவே இறந்ததாக தெரிகிறது. எனினும் போலீசார் மேல்விசாரணை செய்து வருகின்றனர்.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!