News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

அதிரடியாக 85 ஆயிரம் விசாக்கள் ரத்து- அமெரிக்கா அறிவிப்பு

அதிரடியாக 85 ஆயிரம் விசாக்கள் ரத்து- அமெரிக்கா அறிவிப்பு
0 கருத்துக்கள்

அமெரிக்காவில் ஜனவரி முதல் இதுவரையில் 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வெளிநாட்டு கொள்கைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அமல்படுத்த அவர் உத்தரவிடுள்ளார்.

குறிப்பாக,  ஹெச் 1பி விசாவுக்கு புது கட்டுப்பாடுகள், சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைளையும் எடுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில்  8 ஆயிரம் விசாக்கள் மாணவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிவரவு கொள்கை மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் இந்த உத்தரவை எப்போதும் நிறுத்தப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!