News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
இந்தியா

சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்- நிர்மலா சீதாராமன் கணிப்பு

சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்- நிர்மலா சீதாராமன் கணிப்பு
0 கருத்துக்கள்

சட்டமன்ற தேர்தலில் விஜய் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது. திமுகவை விமர்சனம் செய்து வந்த விஜய், தற்போது அதிமுகவையும் விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அதிமுகவினர் அவர் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த தேர்தலில் தவெக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் , " வருகின்ற  சட்டமன்றத் தேர்தலில்  விஜய் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துவார்.  ஆனால், அவர் எந்த கட்சியின் வாக்குகளை பறிக்கப்போகின்றார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.  ஒருவேளை அவர்திமுக கட்சியின் வாக்குகளையும் பெண்களின் வாக்குகளையும் தான் பறிக்கப்போகின்றாரா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். தமிழக அரசியலை பொறுத்தவரை பெண்களுக்கு சக்திவாய்ந்த குரல் இருக்கின்றது. எனவே விஜய்யின் தவெக கட்சி திமுக மற்றும் பெண்களின் வாக்குகளை பறிக்கப்போறாரா என்பது தான் கேள்வியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!