தமிழ்நாடு சௌராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
வருகின்ற 2026 இல் தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்தின் குரல் ஒலிக்கும் பட்சத்தில் சௌராஷ்டிரா இன மக்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை, தொழிலாளர் நலன் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் இன்ஜினியர் கோபிசன் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி- கிழக்கு மாவட்ட செயலாளர் மருது பாண்டியன் தெரிவித்தார்கள்.
1)மொழிவாரி சிறுபான்மையினரான சவுராஷ்டிரா இன சிறுபான்மை மொழி பேசும் மக்கள் என மத்திய அரசில் அங்கீகாரம் பெற்று மத்திய மாநில அரசுப் பணிகளில் 3500 பேரை பணி அமர்த்துவதற்கான வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படும்.
2)சிம்மக் குரலோன் டி எம் சௌந்தர்ராஜன் ஐயாவிற்கு மணிமண்டபம் கட்டுவதற்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வலியுறுத்தப்படும்.
3)தொழில்முறை நெசவாளர்களான சௌராஷ்டிர மொழி பேசும் சமூகத்திற்கு நெசவாளர்களுக்கு அவர்கள் இருக்க சொந்தமாக வீடு கட்டித் தர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவோம்.
4)நெசவாளர் சங்க சொசைட்டிகள் மூலம் ஆக்கபூர்வமான கல்வி,மருத்துவம் மற்றும் சொந்த வீடு திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தனர்