News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

அதிகாலை விபத்து- ஆந்திராவில் 5 பேர் பலி

அதிகாலை விபத்து- ஆந்திராவில் 5 பேர் பலி
0 கருத்துக்கள்

ஆந்திராவில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆந்திர பிரதேசத்தில் உள்ள  கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோடேகல் கிராமத்தில் இன்று (நவம்பர் 29) அதிகாலை 4.30 மணியளவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கார்களும் நொறுங்கின. இந்த தகவல் அறிந்த போலீஸார், அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடடனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  

அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் விபத்து பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த 5 பேரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!