News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

விண்ணில் சீறிப்ப பாய்ந்தது பாகுபலி ராக்கெட்!

விண்ணில் சீறிப்ப பாய்ந்தது பாகுபலி ராக்கெட்!
0 கருத்துக்கள்

அமெரிக்க செயற்கைகோள்  புளூபேர்டை சுமந்துபடி  வெற்றிகரமாக பாகுபலி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் எஸ்எஸ்எல்வி  ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது.

இந்த நிலையில், அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதுபோன்ற செயற்கைக்கோள்களை இதற்கு முன்பு பிரெஞ்சு கயானாவிலிருந்து தான் ஏவப்பட்டு வந்தது. தற்போது அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைப்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் இந்திய மண்ணில் இருந்து ஏவப்படுகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்விஎம்.3- எம்.6 யை விண்ணில் பாய்ந்தது. இதில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.1 டன் எடை கொண்ட 'புளூபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

ராக்கெட் செலுத்தப்பட்ட 15-வது நிமிடத்தில் அது சுமந்த சென்ற ப்ளூபேர்டு பிளாக் 2 செயற்கைகோள் தமது பயணத்தை தொடங்கியது. திட்டமிட்டபடி பூமியில் இருந்து 520 கிலோமீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் புளூபேர்ட் செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!