News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

நள்ளிரவு பரபரப்பு... காணாமல் போன அமமுக எம் எல் ஏ கவர்னர் முன் ஆஜர்

நள்ளிரவு பரபரப்பு... காணாமல் போன அமமுக எம் எல் ஏ கவர்னர் முன் ஆஜர்
0 கருத்துக்கள்

நள்ளிரவு பரபரப்பு….


அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற காமராஜ் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் டிடிவி தினகரன் வழங்கினார். 

அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், நள்ளிரவு ஆளுநரை சந்திக்க லோக் பவன் சென்றார். அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜை காணவில்லை என ஆளுநரிடம் டிடிவி தினகரன் புகார் அளித்த நிலையில் லோக் பவன் சென்றார்.

காணாமல் போனதாக கூறப்பட்ட அமமுக எம்எல்ஏ காமராஜூடன் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்தித்தார்.

ஆளுநர் மாளிகை செயலாளரிடம் இருந்து அழைப்பு வந்ததால் உடனே இங்கு வந்துவிட்டேன். வாகனத்தில் வந்துகொண்டு இருந்ததால் டிடிவி தினகரனின் தொலைபேசி அழைப்பை எடுக்க முடியவில்லை.

தவெகவிற்கு ஆதரவு என்றால் நான் தனியாகவந்திருப்பேன்.

தவெகவிடம் தான் பெரும்பான்மை இல்லையே அவர்கள் எப்படி ஆட்சி அமைக்க முடியும்.

எனக்கு தவெகவிற்கு செல்ல வேண்டும் என எந்த விருப்பமும் கிடையாது என்று 

காணாமல் போனதாக கூறப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்து பேட்டி அளித்தார்.

டிடிவி தினகரன் விளக்கம்:

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், புதுச்சேரியில் விடுதியில் இருந்துள்ளார். போலியாக அவரது பெயரில் கடிதம் வந்ததை பார்த்து பயந்துவிட்டு சென்னைக்கு என்னை பார்க்க வந்துள்ளார்.

யாரோ ஆளுநர் மாளிகைக்கு வாட்ஸ் அப் மூலம் கடித்ததை அவரது பெயரில் கொடுத்து உள்ளனர்.

ஆளுநர் அந்த போலியான பெயரில் வந்த கடிதத்தை படித்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

 இன்னும் தற்போது ஆளுநரிடமும் நேரடியாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 


அமமுக எம்.எல்.ஏ. பெயரில் தவெக போலி ஆதரவு கடிதம் தயாரித்ததாக தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிண்டி காவல்நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகார் கொடுத்துள்ளார்.

 இந்நிலையில்

காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்து கையெழுத்திடுவது போன்ற வீடியோவை வெளியிட்டது.

அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் ஆளுநருக்கு தவெக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என டிடிவி தினகரன் புகாரளித்த நிலையில், காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்தது போன்று கையெழுத்திடும் வீடியோ வெளிவந்துள்ளது.

அந்த வீடியோவில் காரில் அமர்ந்த நிலையில் காமராஜ் கையெழுத்திடுவது போன்ற காட்சி உள்ளது, இந்த வீடியோவை எடுத்தது யார்? எந்த இடத்தில் எப்போது எடுக்கப்பபட்டது? எந்த கடிதத்தில் கையெழுத்து போட்டார் போன்ற விவரங்கள் இல்லை.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!