பட்டிமன்ற பேச்சாளர் சா
லமன் பாப்பையா(90) காலமானார்
மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். இனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2021ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
1936 ம் ஆண்டு பிறந்தவர். வயது90 ஆகிறது. நெஞ்சு வலி காரணத்தால் மதுரையில் தனியார் ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.